ADDED : ஜூலை 23, 2011 11:39 PM
கடலூர் : நள்ளிரவில் தோட்டத்திற்கு சென்றவரை திருடன் எனக் கருதி தாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலூர், மஞ்சக்குப்பம் லோகநாதன் நகரைச் சேர்ந்தவர் விநாயகம், 48. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் இந்திரா. இரு குடும்பத்திற்குமிடையே வீட்டு மனைத் தகராறு காரணமாக முன்விரோதம் உள்ளது. விநாயகம் நேற்று நள்ளிரவு இயற்கை உபாதை கழிக்க தனது வீட்டு தோட்டத்திற்குச் சென்றார். அப்போது தனது வீட்டு தோட்டத்தில் இருந்த இந்திரா திருடன் எனக் கருதி கூச்சலிட்டார். அதனைக் கேட்டு ஓடி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுப்ரமணியன், 44; விநாயகத்தைத் தாக்கினார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சுப்ரமணியனை தேடிவருகின்றனர்.