அணைப்பட்டி கோவில் சுற்றுலா தலமாக்க திட்டம்
அணைப்பட்டி கோவில் சுற்றுலா தலமாக்க திட்டம்
அணைப்பட்டி கோவில் சுற்றுலா தலமாக்க திட்டம்
ADDED : ஆக 17, 2011 12:40 AM

சென்னை : சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, ''நிலக்கோட்டை தொகுதி, அணைப்பட்டியில் ஆஞ்சநேயர் கோவில் பகுதியை சுற்றுலாத் தலமாக்கப்படுமா, என உறுப்பினர் கேட்ட கேள்விக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா பதிலளித்து பேசியதாவது: அதிக அளவில் சுற்றுலா பயணிகள் நிலக்கேட்டை தொகுதி, அணைப்பட்டி கிராம ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகை புரிவதாக கலெக்டர் அரசுக்கு பரிந்துரை செய்தால், அக்கோவிலை சுற்றுலா தலமாக்க அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும், என்றார்.