/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மோசடி போலீஸ் அதிகாரி "சஸ்பெண்ட்' மக்களிடம் வசூலித்த தொகை சுருட்டல்மோசடி போலீஸ் அதிகாரி "சஸ்பெண்ட்' மக்களிடம் வசூலித்த தொகை சுருட்டல்
மோசடி போலீஸ் அதிகாரி "சஸ்பெண்ட்' மக்களிடம் வசூலித்த தொகை சுருட்டல்
மோசடி போலீஸ் அதிகாரி "சஸ்பெண்ட்' மக்களிடம் வசூலித்த தொகை சுருட்டல்
மோசடி போலீஸ் அதிகாரி "சஸ்பெண்ட்' மக்களிடம் வசூலித்த தொகை சுருட்டல்
ADDED : செப் 08, 2011 10:22 PM
கோவை : கோவையில், அபராதத் தொகை ரசீது புத்தகத்தில் தொகையை குறைத்து எழுதி
பணமுறைகேட்டில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ் அதிகாரி, தற்காலிக பணி நீக்கம்
செய்யப்பட்டார். கோவை மாநகரில் நடக்கும் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும்
300க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். அஜாக் கிரதை, குடிபோதை, அதிவேகம்,
மொபைல் போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்
விபத்துகள் அதிகரித்துள்ளன. இதைத்தடுக்க, முக்கிய சாலைகளில் போக்குவரத்து
போலீசார் தினமும் கண்காணித்து, விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
விதித்து வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் மூன்று கோடி ரூபாய் அபராதம்
வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் இரு உதவிக்கமிஷனர்கள், இரு
இன்ஸ்பெக்டர்கள், 15 எஸ்.ஐ.,கள் (போலீஸ் ஸ்டேஷனுக்கு தலா ஒரு எஸ்.ஐ.,
வீதம்) ஈடுபட்டுள்ளனர். சமீபகாலமாக, போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ.,களில்
சிலர் பண முறைகேட்டில் ஈடுபடுவதாக கமிஷனருக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, எஸ்.ஐ.,களின் அன்றாட நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டன.
சிக்கினார் எஸ்.ஐ.,: வாகன தணிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார்,
விதிமீறும் நபர்களிடம் அபராதம் வசூலிக்கும்போது கட்டாயம் அதற்குரிய ரசீது
வழங்க வேண்டும் என்பது உத்தரவு. ஆனால் எஸ்.ஐ.,களில் சிலர், ரசீது வழங்காமல்
அபராதத் தொகை வசூலித்து முறைகேட்டில் ஈடுபடுவது அதிகாரிகளின் விசாரணையில்
அம்பலமானது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரித்தபோது, ரசீது மோசடியும்
வெளிச்சத்துக்கு வந்தது. சரவணம்பட்டி போலீஸ் போக்குவரத்து எஸ்.ஐ., சுரேஷ்
என்பவர் அபராத ரசீது புத்தகத்தில் முறைகேடு செய்து பல ஆயிரம் ரூபாயை
சுருட்டியிருந்தார்.
அதாவது குடிபோதையிலும், மொபைல் போனில் பேசியபடியும் வாகனம் ஓட்டும்
நபர்களிடம் அபராதமாக தலா 1,000 ரூபாய் வசூலித்துள்ளார்; அதற்குரிய
ரசீதையும் வழங்கியுள்ளார். ஆனால், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அந்த
ரசீதுகளுக்குரிய உண்மையான தொகை செலுத்தப்படவில்லை; ரசீதுகளின் அடிக்கட்டை
தாளில் 1,000 ரூபாய்க்கு பதிலாக 50 ரூபாய், 100 ரூபாய் என
குறிப்பிடப்பட்டிருந்தது. ரசீது எழுதும்போதே அந்த தாளின் கீழ் 'கார்பன்
ஷீட்' வைத்து குற்றச்சாட்டு மற்றும் அதற்குரிய அபராதத் தொகை
எழுதப்பட்டிருக்கவில்லை. மாறாக, 'கார்பன் ஷீட்' வைக்காமல் 1,000 ரூபாய்
வசூலிக்கப்பட்டிருப்பதாக ரசீது எழுதி வழங்கப்பட்டிருந்தது. பின்னர்,
டூப்ளிகேட் ரசீதில் குறைவான தொகை எழுதப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த
அதிகாரிகள், இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரிக்கு அறிக்கை
அளித்தனர். போக்குவரத்து எஸ்.ஐ., சுரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
துறைசார்ந்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் உயரதிகாரி
ஒருவர் கூறியதாவது: முறைகேடு குற்றச்சாட்டின் பேரில் தற்காலிக பணி நீக்கம்
செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ., சுரேஷ், எத்தனை ரசீதுகளில் தொகையை குறைத்து எழுதி
மோசடி செய்துள்ளார் என்பதை கண்டறிய ரசீது புத்தகங்களை ஆய்வு செய்து
வருகிறோம்; பல ஆயிரம் ரூபாய் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது.
போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ.,கள், மக்களிடம் இருந்து வசூலிக்கும் அபராத
தொகையை அன்றைய தினமே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செலுத்துகின்றனர்.
பின்னர் அந்த தொகை அரசு கருவூலத்தில் செலுத்தப்படுகிறது. ஒரு எஸ்.ஐ.,
முறைகேட்டில் ஈடுபட்டு பிடிபட்டதை தொடர்ந்து, மற்ற எஸ்.ஐ.,களின் ரசீது
புத்தகங்களையும் ஆய்வு செய்து வருகிறோம். முறைகேட்டில் ஈடுபடுவோர் யாராக
இருப்பினும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போலீஸ் குடும்பங்களுக்கு சமையல்
காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக
சம்பந்தப்பட்ட போலீஸ் ஏட்டு சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அதன்பின், உக்கடம் பகுதியில் விதிமீறி செயல்பட்ட டாஸ்மாக் கடைக்கு சாதகமாக
செயல்பட்ட இன்ஸ்பெக்டர் மாற்றப்பட்டார். தற்போது, போக்குவரத்து எஸ்.ஐ.,
ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு,
போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.


