கறுப்பு பண விவகாரம்: மத்திய அரசு மனு விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்
கறுப்பு பண விவகாரம்: மத்திய அரசு மனு விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்
கறுப்பு பண விவகாரம்: மத்திய அரசு மனு விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்
ADDED : ஆக 17, 2011 01:22 AM

புதுடில்லி : கறுப்புப் பணம் தொடர்பான விவகாரத்தில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
கறுப்புப் பணம் பதுக்கல் தொடர்பான விசாரணையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து, கடந்த ஜூலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,'சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு, ஏற்கனவே சிறப்பாகச் செயல்பட்டு வரும், நிர்வாகக் கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். அரசின் கொள்கை ரீதியான முடிவுகளில், கோர்ட் தலையிடக் கூடாது. இது, நிர்வாக எல்லைக்கு உட்பட்ட விஷயம். எனவே, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கும் உத்தரவை, திரும்பப் பெற வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.
இந்த மனு , நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. எதிர்தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,'சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கும் உத்தரவை, திரும்பப் பெற வலியுறுத்துவதற்குப் பதிலாக, மறு ஆய்வு மனுவை, அரசுத் தரப்பு தாக்கல் செய்யலாம்' என்றனர். இதைத் தொடர்ந்து, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக, சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. இது தொடர்பான விசாரணை, நாளைக்கு (இன்று) ஒத்தி வைக்கப்பட்டது.