Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மாணவர்களிடம் ஆபாச புத்தகம், மொபைல்போன் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வில் அதிர்ச்சி

மாணவர்களிடம் ஆபாச புத்தகம், மொபைல்போன் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வில் அதிர்ச்சி

மாணவர்களிடம் ஆபாச புத்தகம், மொபைல்போன் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வில் அதிர்ச்சி

மாணவர்களிடம் ஆபாச புத்தகம், மொபைல்போன் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வில் அதிர்ச்சி

ADDED : ஜூலை 13, 2011 03:09 AM


Google News
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பார்த்திபனூர், பரமக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் ஒழுங்கு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களிடம் ஆபாச புத்தகம், மொபைல்போன்கள், போதை பாக்குகள் இருந்தது கண்டு முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். பொதுத்தேர்வுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தை முதலிடத்திற்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.பரமக்குடி, பார்த்திபனூர் பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மாணவர்களிடம் ஆபாச புத்தகம் மற்றும் மொபைல் போன்கள் இருந்தன. மேலும் பல கலரில் பெல்ட்கள், ஜாதி பெயர் குறிப்பிட்ட பனியன்கள், கை காப்புகள், ரப்பர் பேண்ட்கள், போதை பாக்குகள் இருந்ததுடன், பட்டன் அணியாமலும், எண்ணெய் தேய்க்காமல் வருவது குறித்தும் கண்டிக்கப்பட்டது.

இவர்களிடம், இனிமேல் ஒழுங்காக பள்ளிக்கு வருவேன் என்றும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று எழுதி கையொப்பம் பெறப்பட்டது. பிடிபட்ட அனைத்து பொருட்களையும் முதன்மை கல்வி அலுவலர் கைப்பற்றினார். முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். தொடர்ந்து 20 நாட்களுக்கு ஒரு முறை மாணவனின் வருகை, ஒழுங்கீனம், பள்ளியில் முழு நேரம் இருக்கின்றாரா என்பதை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் இது போன்ற ஆய்வு நடத்தப்படும். அப்போது மாணவர்களிடம் ஒழுங்கீன நடவடிக்கை காணப்பட்டால் தலைமையாசிரியர் உட்பட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us