/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சாம்பவர்வடகரை அருகே "ஹேர்டை' குடித்த மாணவி பலிசாம்பவர்வடகரை அருகே "ஹேர்டை' குடித்த மாணவி பலி
சாம்பவர்வடகரை அருகே "ஹேர்டை' குடித்த மாணவி பலி
சாம்பவர்வடகரை அருகே "ஹேர்டை' குடித்த மாணவி பலி
சாம்பவர்வடகரை அருகே "ஹேர்டை' குடித்த மாணவி பலி
ADDED : ஆக 03, 2011 12:30 AM
தென்காசி : சாம்பவர்வடகரை அருகே 'ஹேர்டை' குடித்த பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
சாம்பவர்வடகரை அருகே ஊர்மேலழகியான் முப்புடாதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன். கூலி தொழிலாளி. இவரது மகள் கார்த்திகா (16). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு அல்சர் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டார். கடந்த 6 மாத காலமாக மருத்துவ சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கார்த்திகா வீட்டில் இருந்த 'ஹேர்டை'யை எடுத்து குடித்துள்ளார். இதனையறிந்து அவரது பெற்றோர் கார்த்திகாவை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை.,அரசு ஆஸ்பத்திரிக்கு கார்த்திகா கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் பற்றி சாம்பவர்வடகரை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிச்சுமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.