/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/காமராஜரின் வாரிசாக ஜெயலலிதா : அமைச்சர் உதயகுமார் புகழாரம்காமராஜரின் வாரிசாக ஜெயலலிதா : அமைச்சர் உதயகுமார் புகழாரம்
காமராஜரின் வாரிசாக ஜெயலலிதா : அமைச்சர் உதயகுமார் புகழாரம்
காமராஜரின் வாரிசாக ஜெயலலிதா : அமைச்சர் உதயகுமார் புகழாரம்
காமராஜரின் வாரிசாக ஜெயலலிதா : அமைச்சர் உதயகுமார் புகழாரம்
சாத்தூர் : ''கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில் காமராஜரின் வாரிசாக தமிழக முதல்வர் ஜெயலலிதா செயல்படுகிறார்,'' என, அமைச்சர் உதய குமார் கூறினார்.
மாவட்டத்தில் இரு தலைமுறையாக அமைச்சராக இருந்தவர், 'அரசு கல்லூரியை நாங்கள் கொண்டு வர நினைத்தோம். ஆனால் அவர்கள் கொண்டு வந்து விட்டார்கள்,' என, அறிக்கை வெளியிடுகிறார். கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில் காமராஜரின் வாரிசாக தமிழக முதல்வர் விளங்குகிறார். மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் வழங்கும் திட்டம் உலக நாடுகளில் எங்கும் இல்லை. சமச்சீர் கல்வி என்பது கீழே இருப்பவர்கள் மேலே செல்ல படியாக இருக்க வேண்டும். மேலே இருப்பவர்கள் கீழே வரக்கூடாது, என்றார்.
கல்லூரி முதல்வர் செல்லத்துரை வரவேற்றார். கலெக்டர் பாலாஜி, ராஜேந்திரபாலாஜிஎம்..எல்.ஏ, முன்னிலை வகித்தனர். காமராஜர் பல்கலை ஆட்சிக்குழ உறுப்பினர்கள் ஜெயராமன், டேவிட் அமிர்தராஜ், பதிவாளர் (பொறுப்பு) ராஜியக்கொடி பேசினர். அ.தி.மு.க., நகர செயலாளர் வாசன், ஒன்றிய செயலாளர் சுப்புராம், சேதுராமானுஜம், வேலாயுதம், பி.எஸ். என்.எல் கல்லூரி நிர்வாக அலுவலர் குருசாமி கலந்து கொண்டனர். கல்லூரி கட்டுவதற்காக இடத்தை கலெக்டர் பாலாஜியுடன் அமைச்சர் ஆய்வு செய்தார்.


