/உள்ளூர் செய்திகள்/மதுரை/மண்ணெண்ணெய் கேட்டு அடிக்கடி நடக்கும் மறியல்மண்ணெண்ணெய் கேட்டு அடிக்கடி நடக்கும் மறியல்
மண்ணெண்ணெய் கேட்டு அடிக்கடி நடக்கும் மறியல்
மண்ணெண்ணெய் கேட்டு அடிக்கடி நடக்கும் மறியல்
மண்ணெண்ணெய் கேட்டு அடிக்கடி நடக்கும் மறியல்
ADDED : செப் 28, 2011 01:03 AM
மதுரை : மதுரையில் மண்ணெண்ணெய் கேட்டு பொதுமக்கள் அடிக்கடி மறியலில்
ஈடுபடுகின்றனர்.
மாவட்டத்தில் ரேஷன் வினியோகத்தில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு
இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் கலெக்டர்
அலுவலகம், சுந்தரராஜபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த பிரச்னை
நேற்றும் நீடித்தது. நேற்று சோலை அழகுபுரத்தில் பெண்கள் திடீர் மறியலில்
ஈடுபட்டனர்.மதுரை மாவட்டத்திற்கு மாதம் 2436 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய்
வழங்கப்படுகிறது. தற்போது வழக்கமான அளவில் 700 கிலோ லிட்டர்
குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மண்ணெண்ணெய், காஸ் சிலிண்டருக்கு மானியம்
வழங்குகிறது. காஸ் இணைப்பு உள்ளவர்கள் பலர் இணைப்பு விபரத்தை ரேஷன்
கார்டில் பதிவு செய்யாமல், மண்ணெண்ணெயும் பெற்று வருகின்றனர். இதை
தவிர்க்க, இணைப்பை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து காஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களுக்கு மண்ணெண்ணெய் சப்ளை
நிறுத்தப்பட்டது. தற்போது மத்திய அரசு மண்ணெண்ணெய் சப்ளையை
குறைத்துவிட்டதால், ரேஷன் கடைகளுக்கான சப்ளையும் குறைந்துள்ளது.
காஸ்சிலிண்டர் பதிவு செய்தவர்களுக்கு மண்öண்ணெய் நிறுத்தப்பட்டதால்
பெரியளவில் பாதிப்பு இல்லையென்றாலும், சில ரேஷன் கடைகளில் வினியோகத்தில்
பாதிப்பு உள்ளது. இதைத் தவிர்க்க, மண்ணெண்ணெய் வாங்க முடியாத
கார்டுதாரருக்கு டோக்கன் வழங்குகின்றனர். அடுத்த முறை, அவர்களுக்கு
முன்னுரிமை தருகின்றனர். சில இடங்களில் முன்னுரிமை தருவதில்லை என்ற
புகாருடன் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபடுகின்றனர். கலெக்டர்
சகாயத்திடம் கேட்டபோது, ''மண்ணெண்ணெய் சப்ளை குறைந்துள்ளதால், கூடுதலாக
கேட்டுள்ளோம். பற்றாக்குறையால் பிரச்னை ஏற்படும் இடங்களுக்கு கூடுதலாக
வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயற்கையாக தட்டுப்பாடு
ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.