/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மக்கள் பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை மாநகராட்சி புதிய கமிஷனர் உறுதிமக்கள் பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை மாநகராட்சி புதிய கமிஷனர் உறுதி
மக்கள் பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை மாநகராட்சி புதிய கமிஷனர் உறுதி
மக்கள் பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை மாநகராட்சி புதிய கமிஷனர் உறுதி
மக்கள் பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை மாநகராட்சி புதிய கமிஷனர் உறுதி
ADDED : ஆக 06, 2011 01:55 AM
திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சி பகுதி மக்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய கமிஷனர் அஜய் யாதவ் தெரிவித்தார்.நெல்லை மாநகராட்சியின் புதிய கமிஷனராக அஜய் யாதவ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.நெல்லை மாநகராட்சி கமிஷனராக இருந்த சுப்பையன் மாற்றப்பட்டு, புதிய கமிஷனராக அஜய் யாதவ் நியமிக்கப்பட்டார்.
மாநகராட்சியில் புதிய கமிஷனராக அஜய் யாதவ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் சுப்பையன் பொறுப்புக்களை ஒப்படைத்தார்.அஜய் யாதவ் கூறுகையில், ''நெல்லைக்கு தற்போதுதான் முதல்முறையாக வந்துள்ளேன். மாநகராட்சி பகுதியில் மக்களின் தேவைகளை அறிந்து, செயல்படுவேன். மக்கள் பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.அஜய் யாதவ் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் மகராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வருகின்றனர். கடந்த 2006ம் ஆண்டு ஐஏஎஸ்., தேர்ச்சி பெற்று மதுரையில் துணை கலெக்டராக பணியாற்றினார். 2008-09ம் ஆண்டு மயிலாடுதுறையில் சப்-கலெக்டராக பணியாற்றினார். அக்டோபர் மாதம் 2009ம் ஆண்டு முதல் வணிகவரித்துறை உதவி கமிஷனராக பணியாற்றினார்.