வெங்காய கிடங்கில் தீ : ரூ. 10 லட்சம் சேதம்
வெங்காய கிடங்கில் தீ : ரூ. 10 லட்சம் சேதம்
வெங்காய கிடங்கில் தீ : ரூ. 10 லட்சம் சேதம்
ADDED : அக் 07, 2011 09:50 PM

திண்டுக்கல் : திண்டுக்கல் வெங்காய கிடங்கில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 10 லட்ச ரூபாய் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டது.
திண்டுக்கலில் திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் வெங்காயச் சந்தை செயல்படும். திருப்பூர், பல்லடம், தாராபுரம், பெங்களூருவில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்பட்டு, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்குள்ள எஸ்.எஸ்.கே., கிடங்கில், மின்கசிவால் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்தது. இதில் 10 லட்ச ரூபாய் மதிப்புடைய வெங்காயங்கள் கருகின. இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின், தீ அணைக்கப்பட்டது.


