Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/போக்குவரத்து கூட்டுறவு சங்க ஊழியர்கள் சம்பளமே கொடுக்க முடியாத அவல நிலை

போக்குவரத்து கூட்டுறவு சங்க ஊழியர்கள் சம்பளமே கொடுக்க முடியாத அவல நிலை

போக்குவரத்து கூட்டுறவு சங்க ஊழியர்கள் சம்பளமே கொடுக்க முடியாத அவல நிலை

போக்குவரத்து கூட்டுறவு சங்க ஊழியர்கள் சம்பளமே கொடுக்க முடியாத அவல நிலை

ADDED : அக் 04, 2011 11:02 PM


Google News

விழுப்புரம் : விழுப்புரத்தில் கடந்த தி.மு.க., ஆட்சியின் போது மோசடி காரணமாக முடங்கிய போக்குவரத்து கழக பணியாளர் கூட்டுறவு கடன் சங்க அலுவலக ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே அரசு போக்குவரத்துக் கழக பணியாளர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்க அலுவலகம் இயங்கி வருகிறது.

இதில் 5000க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் உறுப்பினராக இருந்து கடன் பெற்று வந்தனர். கடந்த 2006ம் ஆண்டு இந்த கூட்டுறவு சங்கத்தில் மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.இதனால் உறுப்பினர்கள் பலர் கடன் சங்கத்திலிருந்து வெளியேறியதால், கடன் வழங்குவது நிறுத்தப்பட்டு கூட்டுறவு சங்க பணிகள் முடங்கியது. தற்போது கடன் நிலுவையில் உள்ள குறைந்த உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். சங்க அலுவலகத்தில் 17 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால் நேற்று திடீரென அலுவலகத்தை பூட்டி அவர்கள் சம்பளம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட ராமன், வைத்தியநாதன், செல்வம், சிவக்குமார், கதிர்வேல் உள்ளிட்ட ஊழியர்கள் கூறியதாவது:இந்த கூட்டுறவு கடன் சங்கம் கடந்த 81ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது சங்க தலைவர் தொ.மு.ச., வைச் சேர்ந்த பாலசுந்தரம், செயலாளர் பாலு துணைத் தலைவர் கிருஷ்ணன், சேகர் உள்ளிட்ட இயக்குனர்கள் 9 பேர் கொண்ட நிர்வாகத்தினர் 20 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததால் கடன் சங்கம் முடங்கிப்போனது.கட்சியைச் சேர்ந்தவர்கள் மோசடியில் ஈடுபட்டிருந்ததால் தி.மு.க., ஆட்சி காலத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்திவிட்டனர். இதனால் சங்க உறுப்பினர்கள் வெளியேறிவிட்டனர். வங்கி முடங்கியதால் ஊழியர்களுக்கு சம்பளம், போனஸ் வழங்குவதில் ஏமாற்றம் ஏற்பட்டது.தற்போது கடந்த மாதம் முதல் சம்பளமே வழங்காமல் ஏமாற்றப்பட்டுள்ளோம். பிரச்னைகளை தீர்க்க மோசடி செய்த நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களிடமிருந்து பணத்தை வசூலித்து, கடன் சங்கத்தை மீண்டும் செயல்படுத்தி ஊழியர்களின் சம்பளப் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும்.இவ்வாறு ஊழியர்கள் தரப்பில் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us