/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் ஒன்றரை மாதத்தில் நெல்லைக்கு திடீர் மாற்றம்தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் ஒன்றரை மாதத்தில் நெல்லைக்கு திடீர் மாற்றம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் ஒன்றரை மாதத்தில் நெல்லைக்கு திடீர் மாற்றம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் ஒன்றரை மாதத்தில் நெல்லைக்கு திடீர் மாற்றம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் ஒன்றரை மாதத்தில் நெல்லைக்கு திடீர் மாற்றம்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த கலெக்டர் செல்வராஜ் நெல்லை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று திடீரென தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் மாற்றம் செய்யப்பட்டு நெல்லை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வரும் ஆஷிஷ்குமார் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தின் 22வது புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள ஆஷிஷ்குமார் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். 31வது வயதுடைய இளம் கலெக்டரான இவருக்கு மனைவியும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் 46வது கலெக்டராக நியமிக்கப்பட்ட ஆஷிஷ்குமார் பணியேற்ற ஒன்றரை மாதத்தில் அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டு தூத்துக்குடி கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


