/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் 28ம் தேதி முதல் மீண்டும் கலந்தாய்வு : கட்டணம் ரூ. 2,677விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் 28ம் தேதி முதல் மீண்டும் கலந்தாய்வு : கட்டணம் ரூ. 2,677
விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் 28ம் தேதி முதல் மீண்டும் கலந்தாய்வு : கட்டணம் ரூ. 2,677
விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் 28ம் தேதி முதல் மீண்டும் கலந்தாய்வு : கட்டணம் ரூ. 2,677
விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் 28ம் தேதி முதல் மீண்டும் கலந்தாய்வு : கட்டணம் ரூ. 2,677
விழுப்புரம் : விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 28ம் தேதி நடக்கிறது.இது குறித்து கல்லூரி முதல்வர் நீலாயதாட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பித்தவர்களுக்கான தர வரிசைப்பட்டியலில் 946 முதல் 1,500 உள்ள அனைத்து இனத்தவரும் பி.எஸ்சி., தாவரவியல் பாடப்பிரிவிற்கு வரும் 28ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.மறுநாள்(29ம் தேதி) காலை 9 மணியளவில் தர வரிசை பட்டியலில் 1501 முதல் 3677 வரை இடம்பெற்றுள்ள பி.சி., வகுப்பினர் மட்டும் பி.எஸ்சி., கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணிப்பொறியியல் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இதேபோல் அன்று (29ம் தேதி) காலை 9 மணிக்கு தர வரிசை 1001 முதல் 1076 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் பி.சி., பிரிவினர் மட்டும் பி.ஏ.,- பி.காம்., தமிழ்,வரலாறு,வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம்.தர வரிசை பட்டியலில் 79 முதல் 200 வரை இடம்பெற்றுள்ள பி.சி., பிரிவினர் மட்டும் பி.காம்.,(ஒகேஷனல்) 29ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.தர வரிசையில் 1301 முதல் 1600 வரை பெற்றுள்ள அனைத்து இனத்தவரும் பி.எஸ்சி., அனைத்து பாடப்பிரிவுகளும் அடுத்த மாதம் 4ம் தேதி காலை 9 மணிக்கும், தரவரிசை 1001 முதல் 1076 வரை உள்ள அனைத்து இனத்தவரும் பி.ஏ., அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 5ம் தேதி காலை 9 மணிக்கும் கலந்தாய்வில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.மாணவர்கள் அனைத்து மூலச்சான்றுகள் மற்றும் அவற்றின் இரண்டு ஜெராக்ஸ் நகல்கள், மூன்று புகைப்படங்களுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.


