/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/போலீஸ் பற்றாக்குறை: பாதுகாப்பில் தொய்வுபோலீஸ் பற்றாக்குறை: பாதுகாப்பில் தொய்வு
போலீஸ் பற்றாக்குறை: பாதுகாப்பில் தொய்வு
போலீஸ் பற்றாக்குறை: பாதுகாப்பில் தொய்வு
போலீஸ் பற்றாக்குறை: பாதுகாப்பில் தொய்வு
ADDED : செப் 30, 2011 01:16 AM
காரைக்குடி : போலீஸ் பற்றாக்குறையால் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் வரம்பு மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் மனு தாக்கல் செய்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 56 ஆயிரத்து 623 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 28,162 பேரும், பெண்கள் 28,117 பேரும் உள்ளனர். மொத்தம் 11 ஒன்றிய கவுன்சிலர்கள், 26 ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கவுள்ளது. இப்பதவிக்கு விருப்பம் தெரிவித்து கட்சி சார்பிலும், சுயேச்சையாகவும் ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர். நான்கு இடத்தில் மனு தாக்கல் நடந்தது. ஊராட்சி தலைவர் பதவிக்கு மனு தாக்கல் நடந்த இடத்தில் மட்டுமே இரு போலீசார் பணியில் இருந்தனர். மற்ற மூன்று இடங்களில் போலீசார் இல்லாததால் பார்வையாளர்கள் இஷ்டத்திற்கு தகுந்தவாறு உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக இருந்தனர். அலுவலகம் முன்பு கும்பலாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களால் மனு தாக்கல் செய்வோர் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இன்று மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதில் மேலும் பலர் வருவதற்கான வாய்ப்பு உள்ளதால் இந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.