/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பாதாள சாக்கடை திட்ட பணி "புஸ்': அரசு மருத்துவமனையில் அவலம்பாதாள சாக்கடை திட்ட பணி "புஸ்': அரசு மருத்துவமனையில் அவலம்
பாதாள சாக்கடை திட்ட பணி "புஸ்': அரசு மருத்துவமனையில் அவலம்
பாதாள சாக்கடை திட்ட பணி "புஸ்': அரசு மருத்துவமனையில் அவலம்
பாதாள சாக்கடை திட்ட பணி "புஸ்': அரசு மருத்துவமனையில் அவலம்
ADDED : செப் 06, 2011 01:43 AM
ஈரோடு :ஈரோடு அரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை திட்டப் பணி பல மாதங்களாக
கிடப்பில் போடப்பட்டுள்ளதால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
ஈரோடு அரசு
மருத்துவமனைக்கு ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் இருந்து
தினந்தோறும் 2,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து
செல்கின்றனர். 600க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை
பெறுகின்றனர். மருத்துவமனையில் போதிய சாக்கடை வசதி இல்லை. 2010 அக்டோபர்
மாதம் அரசு மருத்துவமனையை சோதனை செய்த, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்,
மருத்துவமனை வளாகத்துக்குள், பாதாள சாக்கடையை அமைக்க முடிவெடுத்தனர்.
அதன்படி, மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே கழிவுநீரை சுத்திகரித்து, அதன்
பின் வெளியேற்றும் வகையில், ராட்சத குழிகள் தோண்டப்பட்டன. ஆரம்பத்தில்
வேகமாக நடந்த பணி, தற்போது ஆமை வேகத்தில் நகரத் துவங்கியது. மருத்துவமனை
ஊழியர்கள் சிலர் கூறியதாவது: அரசு மருத்துவமனையில் 'ஸ்வேஜ் ட்ரீட்மென்ட்
பிளான்ட்' திட்டப்படி சாக்கடை அமைக்கும் பணி அக்டோபரில் துவங்கியது. 2011,
மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டிய பணிகளை, இதுவரை முடிக்காமல்
இழுத்தடித்து வருகின்றனர். தற்போது போதிய நிதியில்லாததால், பணிகள்
அனைத்தும் ஸ்தம்பித்து நிற்கின்றன. மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால்,
சாக்கடை அமைக்க தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கி, மருத்துவமனை வளாகம்
முழுவதும் கொசு மொய்க்கிறது. எனவே, அரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை
பணியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


