/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரயில்களில் அரிசி கடத்தல் ரயில்வே போலீஸ் மெத்தனம்ரயில்களில் அரிசி கடத்தல் ரயில்வே போலீஸ் மெத்தனம்
ரயில்களில் அரிசி கடத்தல் ரயில்வே போலீஸ் மெத்தனம்
ரயில்களில் அரிசி கடத்தல் ரயில்வே போலீஸ் மெத்தனம்
ரயில்களில் அரிசி கடத்தல் ரயில்வே போலீஸ் மெத்தனம்
ADDED : ஜூலை 25, 2011 09:45 PM
கோவை : ரயில்வே போலீசாரின் அலட்சியத்தால், கோவை வழியாக செல்லும் ரயில்களில் அரிசி கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அரிசி கடத்தும் கும்பல், பயணிகள் போல் ரயில் நிலையங்களில் 'உலா' வருகின்றனர். சாதாரண துணிப் பைகளில் அரிசியை நிரப்பிக்கொண்டு ரயில் பெட்டிகளில் நுழைகின்றனர். பிறகு, ரயில் கழிவறைகளில் மறைமுகமாக வைத்துள்ள சாக்குப் பைகளில் முழுமையாக நிரப்பி, மூட்டையை தைத்து விடுகின்றனர். கழிப்பறை செல்லும் பயணிகள் பெரும்பாலும் அவற்றை கண்டு கொள்வதில்லை. காரணம், ரயில் நிர்வாகத்துக்கு சொந்தமான பொருள் என்று ஏமாந்து விடுகின்றனர். அரிசியை எடுத்து செல்லும் இடம் வருவதற்கு முன்னதாக, மீண்டும் தான் கொண்டு வந்துள்ள துணிப் பைகளில் அரிசியை நிரப்பி, சாதாரண பயணிகள் போல், சுலபமாக கடத்தி சென்று விடுகின்றனர். பெரியளவில் கடத்தல் சம்பவங்கள் நடந்த பின்னரே போலீசார் உஷாராகின்றனர்.