வேளாங்கண்ணியில்தீ விபத்து: 6 வீடுகள் சாம்பல்
வேளாங்கண்ணியில்தீ விபத்து: 6 வீடுகள் சாம்பல்
வேளாங்கண்ணியில்தீ விபத்து: 6 வீடுகள் சாம்பல்
ADDED : ஜூலை 24, 2011 09:21 PM
நாகப்பட்டினம்:வேளாங்கண்ணியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், ஆறு வீடுகள் எரிந்து சாம்பலாயின.நாகை அடுத்த வேளாங்கண்ணி, ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சரோஜா.
நேற்று காலை, இவரது வீட்டின் கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில், அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவியதில் செல்வம், ஸ்டாலின், பெஞ்சமின், ஆரோக்கியராஜ், வின்சென்ட் ஆகியோர் வீடுகளும் தீக்கிரையாயின.வேளாங்கண்ணி மற்றும் நாகை தீயணைப்பு நிலைய வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். சேத மதிப்பு, ஐந்து லட்ச ரூபாய். தீ விபத்து குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரிக்கின்றனர்.