UPDATED : செப் 14, 2011 11:42 AM
ADDED : செப் 14, 2011 11:39 AM
சென்னை: செல்போன், ஐபாட், ஐபோன் உள்ளிட்டவைகளுக்கான வாட் வரி உயர்த்தப்படுள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது இதில் வாட்வரி உயர்வுக்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் படி செல்போன், ஐபாட், ஐபோன், உள்ளிட்டவைகளின் வாட் வரி 12.5 சதவீதத்திலிருந்து, 14.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று பீடி சிகரெட், புகையிலைப்பொருட்களின் மீதான வாட் வரி 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. டி.வி.டி. எல்.சி.டி. உள்ளிட்டவைகளின் மீதான வாட் வரியும் 12.5 சதவீத்திலிருந்து 14.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக வணிகவரித்துறைஅமைச்சர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். கடந்த 2007-ம் ஆண்டிற்கு பிறகு வாட்வரி இப்போது தான் வாட்வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.