ADDED : ஆக 28, 2011 12:41 AM
மதுரை : மதுரை நாராயணபுரம், 12, இந்தியன் பாங்க் காலனியில், தேசநந்தினி டிரஸ்ட் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி முகாம் செப்.
1ம் தேதி நடத்தப்பட உள்ளது. யூனியன் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை உண்டு. கம்ப்யூட்டருடன், யோகாசனம், டெய்லரிங், அழகுக்கலை, ஓவியம் உட்பட பல பயிற்சிகளும் நடத்தப்படும். மாணவர்களின் பள்ளிச் செலவுக்காக, பகுதிநேர வேலை மற்றும் பயிற்சியும் வழங்கப்படும். ஆக. 28ம் தேதி கூட்டுவழிபாடு, அன்னதானமும் நடக்கும். அனுமதி கட்டணம் கிடையாது. முன்பதிவுக்கு 94431-80345ல் தொடர்பு கொள்ளலாம், என ஒருங்கிணைப்பாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.


