ADDED : ஆக 02, 2011 11:21 PM
திருப்புத்தூர் : திருப்புத்தூர் தாசில்தார் குடியிருப்புக் கிணற்றில் விழுந்த மாட்டை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
தாலுகா அலுவலக வளாகத்தினுள் தாசில்தார் குடியிருப்பு உள்ளது. அதில் பயன்படுத்தாத கிணறு உள்ளது. மேலே சிமென்ட் சிலாப்களால் மூடப்பட்டுள்ளது. இதனருகே உள்ள வாழை இலையைமாடு ஒன்று கிணற்றின் மீது நின்றவாறு சாப்பிட்டது. அப்போது திடீரென சிலாப் உடைந்ததால் மாடு கிணற்றினுள் விழுந்தது.
கிணற்றில் தண்ணீர் இல்லாவிட்டாலும் குவிந்திருந்த காகிதக் கழிவுகளால் மாடு தப்பித்தது. மேலே வர முடியவில்லை. தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாடு மீட்கப்பட்டது.