நக்சலைட் நடமாட்டம் தடுக்க முதுமலையில் கூட்டு ரோந்து
நக்சலைட் நடமாட்டம் தடுக்க முதுமலையில் கூட்டு ரோந்து
நக்சலைட் நடமாட்டம் தடுக்க முதுமலையில் கூட்டு ரோந்து
ADDED : ஆக 12, 2011 02:08 AM
கூடலூர்:முதுமலையில் நக்சலைட் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்ய, மூன்று
மாநில வனத்துறையினர் - போலீசார் கூட்டு ரோந்துப்பணி மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டத்தை
தடுக்கும் வகையில், நேற்று போலீசாரும், வனத்துறையினரும் இணைந்து திடீர்
ரோந்து பணி மேற்கொண்டனர். நீலகிரி மாவட்ட எஸ்.பி., நிஜாமுதீன் தலைமையில்,
டி.எஸ்.பி.,க்கள் சுரேஷ்குமார், சக்கரவர்த்தி, முதுமலை வனச்சரகர்
புஷ்பாகரன், சிறப்பு அதிரடிப்படை மற்றும் உள்ளூர் போலீசார், வனத்துறையினர்
என 40 பேர் இப்பணியில் ஈடுபட்டனர். 'கேம்ஹட்' பகுதியில் துவங்கி, மண்டமூலா,
புலியாளம், காபூர், அத்திலிபெட்டா வழியாக சென்று, 'டிரைஜங்ஷன்' பகுதியில்
ரோந்துப்பணி நிறைவடைந்தது. இதேபோல, நேற்று கேரள மாநிலம் முத்தங்கா
வனப்பகுதியிலும், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப் பகுதியிலும் ரோந்துப்
பணி நடந்தது. மூன்று மாநில போலீசார் மற்றும் வனத்துறையினர், 'டிரை ஜங்ஷன்'
பகுதியில் ரோந்துப் பணியை நிறைவு செய்தனர். அங்கு மூன்று மாநில கூட்டு
ரோந்துப் படையினர், வனப்பாதுகாப்பு குறித்த விபரங்களை பரிமாறிக் கொண்டனர்.


