/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உலக மக்கள் தொகை தின சிறப்பு முகாம்உலக மக்கள் தொகை தின சிறப்பு முகாம்
உலக மக்கள் தொகை தின சிறப்பு முகாம்
உலக மக்கள் தொகை தின சிறப்பு முகாம்
உலக மக்கள் தொகை தின சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 26, 2011 09:42 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி இரு வார கால சிறப்பு முகாம் நடந்தது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: உலக மக்கள் தொகை தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடந்த சிறப்பு முகாமில் மருத்துவ மனைக்கு அதிகளவில் மக்கள் வந்திருந்தனர்.ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தற்காலிக மற்றும் நிரந்தர இலவச கருத்தடை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில், 34 பெண்களுக்கு 'டியூபக்டமி' 'லேப்ராஸ் கோபிக்' சிகிச்சை செய்யப்பட்டது. ஆண்களுக்கு ஆணுறைகளும், 32 பெண்களுக்கு கருத்தடை வளையம் மற்றும் கருத்தடை மாத்திரைகளும், கருத்தடை சிகிச்சைகள் செய்து கொண்ட பெண்களுக்கு 600 ரூபாயும் வழங்கப்பட்டன. 500க்கும் மேற்பட்ட தம்பதியர்களுக்கு 'கவுன்சிலிங்' அளிக்கப்பட்டது என்றனர்.