ஐ.நா., உறுப்பினராக தெற்கு சூடானுக்கு பரிந்துரை
ஐ.நா., உறுப்பினராக தெற்கு சூடானுக்கு பரிந்துரை
ஐ.நா., உறுப்பினராக தெற்கு சூடானுக்கு பரிந்துரை
ADDED : ஜூலை 14, 2011 10:45 PM
நியூயார்க் : தெற்கு சூடான் நாட்டை, ஐ.நா., உறுப்பு நாடாக சேர்க்க, ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
சூடானிலிருந்து, கடந்த 9ம் தேதி, தெற்கு சூடான் தனி நாடாக பிரிந்தது. இந்நாட்டை , ஐ.நா.,வின் உறுப்பு நாடாக சேர்ப்பதற்கு 15 நாடுகள் கொண்ட ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் ஓட்டெடுப்பு நடத்தாமல், பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம், ஐ.நா.,வின் 193வது உறுப்பு நாடாக தெற்கு சூடான் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2006ம் ஆண்டில், மான்டிநீக்ரோ இறுதியாக ஐ.நா., உறுப்பு நாடாக இணைக்கப்பட்டது. தைவான் மற்றும் கோசோவா நாடுகள் இணைய, வீட்டோ அதிகாரம் கொண்ட ரஷ்யா மற்றும் சீனா எதிர்ப்பு தெரிவித்ததால், இந்நாடுகள் சேர முடியவில்லை. தெற்கு சூடான் பற்றி, ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் பேசிய ஐ.நா., பொதுச் செயலர் பான் கீ மூன், 'உலகிலேயே, மனித வளர்ச்சி தொடர்பான அனைத்து குறியீடுகளிலும், தெற்கு சூடான் பின்னணியில் உள்ளது' என்றார்.


