/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை போலீஸ் குடியிருப்பில் செல்லப்பிராணிகள் வளர்க்க தடைமதுரை போலீஸ் குடியிருப்பில் செல்லப்பிராணிகள் வளர்க்க தடை
மதுரை போலீஸ் குடியிருப்பில் செல்லப்பிராணிகள் வளர்க்க தடை
மதுரை போலீஸ் குடியிருப்பில் செல்லப்பிராணிகள் வளர்க்க தடை
மதுரை போலீஸ் குடியிருப்பில் செல்லப்பிராணிகள் வளர்க்க தடை
ADDED : செப் 25, 2011 03:29 AM
மதுரை:மதுரை போலீஸ் குடியிருப்பில் கோழி, மாடு, நாய் போன்ற பிராணிகளை
வளர்க்க தடைவிதிக்கப்பட்டது.ஆயுதப்படை, திடீர்நகர், தல்லாகுளம், ஹஜ்மல்கான்
ரோடு, தெற்குவெளிவீதி, கிரைம்பிராஞ்ச் உட்பட பல்வேறு இடங்களில்
அடுக்குமாடி போலீஸ் குடியிருப்புகள் உள்ளன.
இங்கு பலர் வீட்டின்
பால்கனியில் செடி வளர்க்கின்றனர். இதற்காக ஊற்றப்படும் தண்ணீர் வழிந்து,
கீழ்தளங்களில் வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.மேலும், அருகில்
வசிப்போருக்கு இடையூறாக செல்லப்பிராணிகளை வளர்க்கின்றனர். இதைதொடர்ந்து,
கமிஷனர் கண்ணப்பன் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், கோழி, ஆடு, மாடு,
புறா, நாய் போன்ற செல்லப்பிராணிகளை வளர்க்க கூடாது. பால்கனியில் செடி
வளர்த்தால், வெளியே பரவாமல், அடுத்த வீட்டிற்கு பரவாமல் இருக்க வேண்டும்.
குடியிருப்பு வளாகத்தில், குடிபோதையில் இடையூறு செய்தால் சம்பந்தப்பட்டவர்,
வீட்டை காலி செய்துவிட வேண்டும், என எச்சரித்துள்ளார்.


