Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அரசின் நலத்திட்டங்கள் கிடைத்திட ஊராட்சிகளில் அலுவலகம் திறப்பு

அரசின் நலத்திட்டங்கள் கிடைத்திட ஊராட்சிகளில் அலுவலகம் திறப்பு

அரசின் நலத்திட்டங்கள் கிடைத்திட ஊராட்சிகளில் அலுவலகம் திறப்பு

அரசின் நலத்திட்டங்கள் கிடைத்திட ஊராட்சிகளில் அலுவலகம் திறப்பு

ADDED : அக் 07, 2011 10:52 PM


Google News

தேவகோட்டை : அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் கிடைத்திட மூன்று பஞ்சாயத்திலும் அலுவலகம் அமைத்து குறைகள் தீர்ப்பேன் என்று காங்., வேட்பாளர் சபாபதி தெரிவித்தார்.தேவகோட்டை ஒன்றியத்தில் உறுதிக்கோட்டை, வெளிக்கட்டி, திராணி ஊராட்சிகளை உள்ளடக்கியது ஒன்றிய குழு 8 வது வார்டு.

இதில் காங்.,வேட்பாளராக சபாபதி போட்டியிடுகிறார்: வீரகண்டான்வயல்,பள்ளபச்சேரி,தெள்ளியன் வயல்,ஒத்தமுத்து கண்மாய் தார்சாலை, பழுதாகியுள்ள கோபாலபுரம்-சொக்கநாதபுரம் செல்லும் தார்சாலை சீர் செய்து புதிய தார் சாலை அமைக்கப்படும். நெடோடை, வீரகண்டான் வயல் கிராமங்களில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும். தாஸ்புரம், சார்வனேந்தல், சண்முகநாதப்பட்டினம், திராணி, போரடப்பு, வெள்ளிகட்டி, ஆகிய இடங்களில் எம்.பி.நிதியில் திருமண மண்டபம் கட்டித்தரப்படும். உறுதிக்கோட்டை, திராணி, திட்டுக்கோட்டை,குமாரவேலூர், சீனமங்களம், சண்முகநாதபட்டினம்,புக்குடி, கோவிலான்பட்டி, சத்திராவயல்,செங்கற்கோயில்,வெள்ளிகட்டி,போரடப்பு தேவர் குடியிருப்பு, உவர்குளம், கடம்பாகுடி, நெடோடையில் சிமென்ட் சாலை அமைக்கப்படும். சண்முகநாதபட்டினம்,சீனமங்களம், சொக்கநாதபுரம் (மேலத்தெரு, கீழத்தெரு ஊருணிகள்) வெள்ளிக்கட்டி ஆகிய ஊருணிகளுக்கு படி, முள்வேலி, நடைமேடை அமைக்கப்படும். அரசு மருத்துவமனை, பள்ளி கூடுதல் கட்டடங்கள், பள்ளி அடிப்படை வசதிகள் , புதிய பேருந்து வழித்தடங்கள்,புதிய பஸ் ஸ்டாப், உட்பட அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படும். முதியோர் பென்ஷன், பெண்கள் திருமண உதவி தொகை, மகப்பேறு உதவி தொகை உடனடியாக கிடைத்திட மூன்று பஞ்சாயத்திலும் தனி அலுவலகம் அமைத்து துரித நடவடிக்கை எடுக்கப்படும். திராணி,உறுதிக்கோட்டை ஊராட்சியில் புதிய வங்கிக் கிளை, ஏ.டி.எம்., மையம், சொக்கநாதபுரம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மூலம் ஏ.டி.எம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். மாணவர்களுக்கு கல்விக்கடன், விவசாயக்கடன், சுய உதவி குழு கடன்,தொழிற்கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஒன்றிய கவுன்சிலராக தேர்வு பெற்றால் எம்.பி. நிதி உதவி, ராஜ்யசபா எம்.பி.க்கள் நிதி உதவியுடனும் திராணி, வெள்ளிக்கட்டி, உறுதிக்கோட்டை ஊராட்சிஅடங்கிய 8 வது வார்டை மாநிலத்தின் முன் மாதிரி ஒன்றிய குழுவாக மாற்றுவேன்.இவ்வாறு அவர் பேசினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us