Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஓட்டுக்கு பணம் கொடுப்போர் வாங்குவோர் மீது நடவடிக்கை

ஓட்டுக்கு பணம் கொடுப்போர் வாங்குவோர் மீது நடவடிக்கை

ஓட்டுக்கு பணம் கொடுப்போர் வாங்குவோர் மீது நடவடிக்கை

ஓட்டுக்கு பணம் கொடுப்போர் வாங்குவோர் மீது நடவடிக்கை

ADDED : அக் 07, 2011 02:08 AM


Google News
மதுரை:செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செக்கானூரணி, வாலாந்தூர், நாட்டார்ப்பட்டி, குறவன்குடி என பல பகுதிகளில் ஆய்வு செய்த கலெக்டர் பொதுமக்களிடம் பேசியதாவது:ஜனநாயக முறைப்படி நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்திடவும், நன்னடத்தை விதிகளுக்குட்பட்டு செயல்பட வேண்டும். கிராமங்களின் முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றம். கிராமங்களை உளமார நேசிக்கிற, கிராம முன்னேற்றத்திற்கு எப்போதும் பாடுபடும் தலைவர்களை மட்டும் தேர்ந்தெடுங்கள். ஓட்டுக்கு பணம் மற்றும் சன்மானம் கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் போட்டியிடுவதும், வாக்களிப்பதும்

மக்களின் கடமை. இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us