/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உருளையன்பேட்டை காங்., மாணவர்களுக்கு பரிசளிப்புஉருளையன்பேட்டை காங்., மாணவர்களுக்கு பரிசளிப்பு
உருளையன்பேட்டை காங்., மாணவர்களுக்கு பரிசளிப்பு
உருளையன்பேட்டை காங்., மாணவர்களுக்கு பரிசளிப்பு
உருளையன்பேட்டை காங்., மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஆக 22, 2011 10:50 PM
புதுச்சேரி : உருளையன்பேட்டை காங்., மற்றும் இளைஞர் காங்., சார்பில், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா, ரோஸ்மா திருமண நிலையத்தில் நடந்தது.
காமராஜர், ராஜிவ் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த விழாவிற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ராஜன் தலைமை தாங்கினார். இளைஞர் காங்., பொதுச் செயலாளர் சாம்ராஜ் முன்னிலை வகித்தார். உருளையன்பேட்டை தொகுதியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள், பொதுத் தேர்வில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை மாநில காங்., தலைவர் சுப்ரமணியன் வழங்கினார். முன்னாள் அமைச்சர் காந்திராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., நீலகங்காதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விவேகானந்தன் நன்றி கூறினார்.