/உள்ளூர் செய்திகள்/தேனி/காச நோயை ஆரம்ப நிலையில்கண்டறிய நடவடிக்கைகாச நோயை ஆரம்ப நிலையில்கண்டறிய நடவடிக்கை
காச நோயை ஆரம்ப நிலையில்கண்டறிய நடவடிக்கை
காச நோயை ஆரம்ப நிலையில்கண்டறிய நடவடிக்கை
காச நோயை ஆரம்ப நிலையில்கண்டறிய நடவடிக்கை
ADDED : ஆக 06, 2011 10:32 PM
கம்பம்:காசநோய் தாக்த்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய, நவீன பரிசோனைகளை அரசு
ஆஸ்பத்திரிகளில் மேற்கொள்ள, மருத்துவ கல்வி இயக்குனரகம்
உத்தரவிட்டுள்ளது.எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு காசநோய் எளிதில்
தாக்கும் வாய்ப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவே இதற்கு காரணம்.
தமிழகத்தில் ஐந்தாண்டுகளுக்கு முன் காசநோயை கட்டுப்படுத்துவதற்கு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாவட்டங்களில் தனி அதிகாரிகள்
நியமிக்கப்பட்டனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் ,விழிப்புணர்வு
பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. காசநோயாளிகள் எண்ணிக்கை இதுவரை குறையவில்லை
என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1.8 மில்லியன் காச
நோயாளிகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பரிசோதனை
முறைகள் மிகவும் பழமையானவை என்றும், இந்தியாவில் நவீன முறைகளை கையாளவும்
அறிவுறுத்தியுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் அனைவரையும் காசநோய்
பரிசோதனைக்கு உட்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோய்
தாக்கியுள்ளதை ஆரம்பநிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம். எதிர்ப்பு
சக்தியை அதிகப்படுத்துவதற்கான முறைகளை நோயாளிகளுக்கு சொல்லித் தரவும்
முடிவு செய்யப்பட்டுள்ளது.


