கேரளாவில் ஒளிவு மறைவற்ற ஆட்சி நிர்வாகம் : உம்மன் சாண்டிக்கு நியூயார்க் டைம்ஸ் பாராட்டு
கேரளாவில் ஒளிவு மறைவற்ற ஆட்சி நிர்வாகம் : உம்மன் சாண்டிக்கு நியூயார்க் டைம்ஸ் பாராட்டு
கேரளாவில் ஒளிவு மறைவற்ற ஆட்சி நிர்வாகம் : உம்மன் சாண்டிக்கு நியூயார்க் டைம்ஸ் பாராட்டு

திருவனந்தபுரம் : 'கேரள முதல்வர் உம்மன் சாண்டி, ஒளிவு மறைவற்ற ஆட்சி செய்கிறார்' என, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பாராட்டியுள்ளது.
இந்நிலையில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி, தனது அரசின் செயல்பாடு ஒளிவு மறைவற்றதாக இருக்க வேண்டும் என கருதினார். இதற்காக, அவரது அலுவலகத்தில், வெப் கேமரா பொருத்தப்பட்டது.
கடந்த 1ம் தேதி முதல் அவரின் பணிகள் அனைத்தையும் 'ஆன் - லைன்' மூலம் அனைவரும் தெரிந்து கொள்ள வழி செய்துள்ளார். மக்களின் குறைகள், மனுக்கள் ஆகியவற்றை பதிவு செய்ய www.keralacm.gov.in என்ற வெப்சைட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டம், அரசு துறைகளில் நடைபெறும் கூட்டங்கள், பத்திரிகையாளர்களுடனான கூட்டம் ஆகியவற்றை, அந்த 'வெப்சைட்'டில் சென்று பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். இதுகுறித்து உம்மன் சாண்டி கூறுகையில், 'எனது அரசு வெளிப்படையான அரசாக இருக்க வேண்டும் என கருதுகிறேன். அதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
'வெப் கேமரா மூலம் இந்தியாவில் ஒளிவு மறைவற்ற அரசு' என்ற தலைப்பில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி குறித்து, நியூயார்க் டைம்சின் இன்டர்நெட் எடிஷன் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மேலும் அந்த பத்திரிகை கூறுகையில், 'இந்தியாவில் லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வது அதிகரித்து வருகிறது. அரசு துறைகள்
முதல் போலீஸ் ஸ்டேஷன், வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை, எல்லாவற்றிலும் பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி, ஒளிவு மறைவற்ற ஆட்சி செய்வதற்காக, தனது பணிகளை ஆன் - லைன் மூலம் செய்து வருகிறார்' என்று பாராட்டியுள்ளது.