/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போலீஸ்-பொதுமக்கள் உறவில் குற்றங்களை தடுத்து நிறுத்தலாம்'போலீஸ்-பொதுமக்கள் உறவில் குற்றங்களை தடுத்து நிறுத்தலாம்'
போலீஸ்-பொதுமக்கள் உறவில் குற்றங்களை தடுத்து நிறுத்தலாம்'
போலீஸ்-பொதுமக்கள் உறவில் குற்றங்களை தடுத்து நிறுத்தலாம்'
போலீஸ்-பொதுமக்கள் உறவில் குற்றங்களை தடுத்து நிறுத்தலாம்'
ADDED : ஆக 25, 2011 11:28 PM
பேரூர் : 'போலீஸ் - பொதுமக்கள் உறவு சுமூகமாக இருந்தால் தான் குற்றங்களை
தடுக்க முடியும்,' என, கோவை எஸ்.பி., உமா பேசினார். போலீஸ் -பொதுமக்கள்
கலந்தாய்வு கூட்டம், பேரூரில் நடந்தது. பேரூர் டி.எஸ்.பி., சண்முகம்
வரவேற்றார். கோவை எஸ்.பி., உமா பேசியதாவது: குற்றச்செயல்
நடக்காமிலிருக்கவும், சட்டம், ஒழுங்கு பராமரிப்பதில் போலீசுக்கு பொதுமக்கள்
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போக்குவரத்தை சரிசெய்தல், குற்றவாளிகளை
பிடித்தல், சட்டவிரோதச் செயல்கள் போன்ற பணிகளை தடுக்கும் வகையில்
போலீசாருக்கு உதவலாம். போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தங்களது குறை,
பிரச்னைகளை தெரிவிக்க தயங்கும் பொதுமக்களுக்கும் - போலீசாருக்கும்,
காவல்துறை நண்பர்கள் ஒரு பாலமாக இருக்க வேண்டும். குற்றங்களை கண்டுபிடிக்க
சிரமப்படும்போது, உளவுத்தகவல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம். போலீஸ் -
பொதுமக்கள் நல்லுறவை பேணும் வகையில், காவல்துறை நண்பர்கள் இருதரப்பினரிடயே
தொடர்பை ஏற்படுத்திட வேண்டும்
இவ்வாறு எஸ்.பி., பேசினார். பேரூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை,
பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளில், கடந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய, 35 காவல்துறை
நண்பர்களுக்கு, பரிசு, சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். திக வெப்பம்
உமிழும் டார்ச்சர் பேட்டரிகளும் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட
குற்றப்பதிவாளர் மாரியப்பன், வடவள்ளி இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம், பேரூர்
எஸ்.ஐ., பழனிசாமி, தொண்டாமுத்தூர் எஸ்.ஐ., சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.