Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பணிகள் துவக்கம் : தே.மு.தி.க., அடிப்படை உறுப்பினர் பதவி நீக்கம்

போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பணிகள் துவக்கம் : தே.மு.தி.க., அடிப்படை உறுப்பினர் பதவி நீக்கம்

போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பணிகள் துவக்கம் : தே.மு.தி.க., அடிப்படை உறுப்பினர் பதவி நீக்கம்

போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பணிகள் துவக்கம் : தே.மு.தி.க., அடிப்படை உறுப்பினர் பதவி நீக்கம்

ADDED : ஆக 09, 2011 02:17 AM


Google News

திற்பரப்பு : திற்பரப்பு அருவியில் கடந்த டிசம்பரில் ஏற்பட்ட சேதங்களை சீர்செய்ய கேட்டு தே.மு.தி.க., முன்னாள் மாவட்ட செயலாளர் அறிவித்த போராட்டத்தை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் துவங்கியது.

ஆனால் பணி துவங்கும் முன்பே போராட்டம் அறிவித்தவரின் அடிப்படை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.திற்பரப்பு அருவியில் கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை சீர்செய்யாமல் காலம் கடத்தி வருவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இயற்கையின் அழகும், எப்போதும் கொட்டும் தண்ணீரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது. இதனால் அருவிக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பஞ்., சிற்கும் வரியினங்கள் மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது.ஆனால் வெள்ளப்பெருக்கில் ஏற்பட்ட சேதங்களை சீர்செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. சுற்றுலா வருபவர்கள் அவ்வப்போது சேதப்பகுதிகளில் சிக்கி காயமடைவதும் வாடிக்கையாக இருந்தது. சில அரசியல் கட்சிகளும் இது குறித்து குரல் கொடுத்து வந்தன. பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியானது.தே.மு.தி.க., முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகநாதன், திற்பரப்பு அருவியில் சீரமைப்பு பணிகள் துவங்காததை கண்டித்து 10ம் தேதி(நாளை) பஞ்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டமும், அருவியில் குளிக்க செல்பவர்களை பாடைகட்டி கொண்டு செல்லும் போராட்டமும் நடத்தபோவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான இரண்டாவது நாள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் அருவியின் அருகில் குவிக்கப்பட்டு, ஒருசில தினங்களில் பணியும் துவங்கப்பட்டது. போராட்ட அறிவிப்பை தொடர்ந்து கட்சி மேலிடம் ஜெகநாதனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவித்துள்ளது.



இது குறித்து ஜெகநாதன் கூறியதாவது:மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலம் இவ்வாறு கேட்பாரற்று கிடப்பது மாவட்டத்திற்கே அவமானம். தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ளவர்களும், மற்ற மாநிலத்தவர்களும், வெளிநாட்டவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், அரசியல் கட்சிகள் எடுத்து கூறியும் பஞ்., நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாததால் மாவட்ட செயலாளரின் அனுமதியோடு போராட்டம் அறிவித்தேன்.ஆனால் கட்சி மேலிடம் என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. அதேவேளை போராட்ட அறிவிப்பை தொடர்ந்து கட்டுமான பொருட்கள் அருவியில் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் நடக்குமானால் என் மீது கட்சி மேலிடம் எடுத்த முடிவால் வருந்தமாட்டேன். இவ்வாறு ஜெகநாதன் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us