/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/நாகலாபுரம் பள்ளியில் நில அளவை நேரடி பயிற்சி முகாம்நாகலாபுரம் பள்ளியில் நில அளவை நேரடி பயிற்சி முகாம்
நாகலாபுரம் பள்ளியில் நில அளவை நேரடி பயிற்சி முகாம்
நாகலாபுரம் பள்ளியில் நில அளவை நேரடி பயிற்சி முகாம்
நாகலாபுரம் பள்ளியில் நில அளவை நேரடி பயிற்சி முகாம்
ADDED : ஆக 13, 2011 12:48 AM
புதூர் : புதூர் அருகே உள்ள நாகலாபுரம் எஸ்.ஏ.என்.மேல்நிலைப்பள்ளி
வளாகத்தில் புவியியல் மற்றும் வேளாண்மை செயல்முறை பாடப்பிரிவு மாணவ
மாணவியர்களுக்கு ஒருநாள் நில அளவை நேரடி பயிற்சி முகாம் நடந்தது.
பள்ளி
தலைமை ஆசிரியர் முருகாண்டிசாமி தலைமை வகித்தார். புவியியல் பாடப்பிரிவு
மாணவி சத்யா வரவேற்றார். ஆங்கில முதுகலை ஆசிரியை ஆறுமுகரத்தினம் முன்னிலை
வகித்தார். புவியியல் முதுகலை ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் மேல்நிலை
தொழிற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நில அளவை
முறைகள், பட்டக திசைகாட்டி, கொம்புகள், அளவை சங்கிலி ஆகிய கருவிகளில்
உதவியால் நேரடி செயல் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து மாணவ மாணவியர்கள் நில
அளவை மேற்கொண்டு கிடைத்த புள்ளி விபரங்கள் மற்றும் மாதிரி விளக்க படங்களை
தங்களது பதிவேட்டில் முறையாக பதிவு செய்தனர். முடிவில் வேளாண்மை செயல்முறை
பாடப்பிரிவு மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


