Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சாலைப்பணியாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை

சாலைப்பணியாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை

சாலைப்பணியாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை

சாலைப்பணியாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை

ADDED : செப் 06, 2011 01:47 AM


Google News
ராசிபுரம்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ராசிபுரத்தில் நடந்தது.

நகர துணைத்தலைவர் அப்பாவு தலைமை வகித்தார். நிர்வாகி முத்துசாமி வரவேற்றார். இணைச் செயலாளர்கள் கோவிந்தராஜூ, சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சாலைப்பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்ட, 41 மாத காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். இறந்து போன சாலைப்பணியாளர் குடும்ப வாரிசுகளுக்கு, பணி வழங்க வேண்டும். பணியாளர்கள் அனைவருக்கும் வேலை நிதியில் இருந்து ஊதியம் என்ற முறையை கைவிட்டு, கருவூலம் மூலம் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எட்டு கி.மீ.,ருக்கு, இரண்டு பேர் வீதிமாக பிரித்து பணிகளை வழங்க வேண்டும். தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், நாளை (செப்.,7) சென்னையில் நடக்கும் பேரணியில், சங்கத்தினர் குடும்பத்தினருடன் பங்கேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், பொருளாளர் தனபால், செயலாளர் பெரியசாமி, மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us