பொறியியலாளர்களாகிய நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்
பொறியியலாளர்களாகிய நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்
பொறியியலாளர்களாகிய நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்
UPDATED : செப் 17, 2011 01:06 AM
ADDED : செப் 16, 2011 11:34 PM
சென்னை: 'பொறியியல் துறையில் வளர நம்மை தயார் படுத்தி கொண்டு நவீன உலகில் போட்டி மனப்பான்மையோடு வாழ வேண்டும்' என, அண்ணா பல்கலைக் கழகத்தின் சிவில் துறை முதல்வர் சேகர் பேசினார்.
'' இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி '' சார்பில், 44 வது பொறியியலாளர்களின் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், அண்ணா பல்கலை சிவில் துறை முதல்வர் சேகர் பேசியதாவது: இன்ஜினியரிங் துறையை பல மாணவர்களுக்கு நான் வகுப்பு எடுத்துள்ளேன். நாட்டில் சமீப காலமாக விபத்துகளும், பயங்கரவாதிகளின் தாக்குதலும் அதிகரித்து விட்டன. பொறியியலாளர்களாகிய நாம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அனைத்து துறைகளிலும் நாம் சிறப்பாக செயல் பட வேண்டும். நாட்டில், 1 லட்சத்து, 80 ஆயிரம் மக்கள் பொறியியல் துறையில் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். பொறியியல் துறையில் இருக்கும் நாம் வளர நம்மை துறை சார்ந்த விஷயங்களோடு ஒருமுகப்படுத்தி கொள்ள வேண்டும். பொறியியல் துறையில் வளர நம்மை தயார் படுத்தி கொண்டு நவீன உலகில் போட்டி மனப்பான்மையோடு வாழ வேண்டும். இவ்வாறு சேகர் கூறினார். பொறியியலாளர்கள் தினத்தை முன்னிட்டு, மறைந்த பாரத ரத்னா விருது பெற்ற விஸ்வேஸ்வராயா வின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 'இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங்' குழுவின் அவைத் தலைவர் திருநாவுக்கரசு, பொதுச் செயலர் சத்தியமூர்த்தி, தலைவர் சேஷாத்திரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


