சிறுவர் ரயிலை ஓட்டி இளம்பெண் சாதனை
சிறுவர் ரயிலை ஓட்டி இளம்பெண் சாதனை
சிறுவர் ரயிலை ஓட்டி இளம்பெண் சாதனை
ADDED : செப் 29, 2011 01:45 AM
புதுச்சேரி : தாவரவியல் பூங்கா சிறுவர் ரயிலை இளம் பெண் ஒருவர் ஓட்டி சாதித்தார்.
புதுச்சேரி கேண்டீன் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவர் மகள் சசிபிரபா, 27; இவர் போக்குவரத்துத் துறையில் வழங்கப்படும் அனைத்துவித வாகனங்களுக்குரிய லைசன்சையும் பெற்றுள்ளார்.கார், பஸ், ஜெ.சி.பி., கிரேன் என இலகு மற்றும் கனரக வாகனங்களை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.புது முயற்சியாக தாவரவியல் பூங்காவில் சிறுவர்களுக்காக இயக்கப்படும் ரயிலை நேற்று ஓட்டினார். அரசு கொறடா நேரு எம்.எல்.ஏ., கொடியசைத்துத் துவக்கி வைத்தார். வேளாண் துறை இயக்குனர் சத்தியசீலன் கலந்து கொண்டார். சசிபிரபா காலை 10.30 மணிக்கும், மாலை 5 மணிக்கும்ரயில் இயக்கி சாதனை படைத்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: ரயில் ஓட்ட வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. இதுதொடர்பாக ரயில் நிலையத்தை அணுகியபோது, மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என கூறிவிட்டனர். இதனையடுத்து மாநில அரசின் அனுமதி பெற்று, சிறுவர் ரயிலை ஓட்டினேன். அடுத்த மாதம் 'ஸ்டீமர் போட்' ஓட்ட உள்ளேன்'என்றார்.


