ADDED : ஆக 19, 2011 03:08 AM
திட்டக்குடி:ம.புடையூரில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு சுகாதாரப்
பயிற்சி அளிக்கப்பட்டது.திட்டக்குடி அடுத்த ம.புடையூர் ஊராட்சியில் மகளிர்
சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு சுகாதாரப் பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாமிற்கு ஊராட்சித் தலைவர் தெய்வராணி தலைமை தாங்கினார். ஊராட்சி எழுத்தர்
மதிவாணன் வரவேற்றார். வட்டார ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் பங்கேற்று தனி
நபர் கழிவறை, தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்ட தலைப்புகளில்
பயிற்சி அளித்தார்.
மகளிர் சுய உதவிக்குழு தலைவி தங்கம் நன்றி கூறினார்.


