ADDED : ஆக 29, 2011 10:26 PM
கள்ளக்குறிச்சி : மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளராக முன்னாள் சேர்மன் தங்கபாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., பொது குழு உறுப்பினராக இருந்து வந்த தங்கபாண்டியன் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை அ.தி.மு.க., மாவட்ட செயலாளரான அரசு கொறடா மோகன் பரிந்துரையின் பேரில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ., நியமனம் செய்துள்ளார். கடந்த அ.தி. மு.க., ஆட்சியின்போது தங்க பாண்டியன் கள்ளக்குறிச்சி ஒன்றிய சேர்மனாக பதவி வகித்துள்ளார்.


