Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஏழை பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அமைச்சரிடம் மனு

ஏழை பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அமைச்சரிடம் மனு

ஏழை பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அமைச்சரிடம் மனு

ஏழை பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அமைச்சரிடம் மனு

ADDED : ஆக 08, 2011 03:13 AM


Google News
ப.வேலூர் : 'அரசு ஒதுக்கீடு செய்த இலவச வீட்டு மனை பட்டாக்களை ஏமாற்றி, அரசு பணியாளர்களுக்கும், வெளியூர் நபர்களுக்கும் அவசரகதியில் வழங்கப்பட்டுள்ளது.

அதை ரத்து செய்து, உண்மையான ஏழை பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கிராம மக்கள் சார்பில், வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ப.வேலூர் தாலுகா, புஞ்சை இடையார் மேல்முகம் கிராமத்தை சேர்ந்த நாவிதர், வண்ணார், போயர் சமூகத்தை சேர்ந்த நிலமற்ற ஏழைப்பயனாளிகளுக்கு, இலவச வீட்டு மனைப்பட்டாவுக்கு கடந்த, 1983ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சியில், படமுடிபாளையத்தில் நான்கு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. கடந்த, 2010ல் கொல்லிமலையில் நடந்த அரசு விழாவில், அவசரகதியில் பட்டா வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பட்டாவில், நிலம் உள்ளவர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் வெளியூர் நபர்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டது. இலவச வீட்டுமனைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில், இரண்டரை செண்டு வீதம் பிரிக்கப்பட்ட நிலையில், அவசர கதியில் இரண்டு செண்டு வீதம், 104 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இம்முறைகேடுகளை களையக்கோரி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி, அப்போதைய கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், துணை தாசில்தார் தலைமையில், ஆர்.ஐ., மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். மேலும், டி.ஆர்.ஓ.,வும் ஆய்வு செய்தார். அந்த ஆய்வுகள் நிலுவையில் உள்ளன. கடந்த, 28 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நீதிமன்றத்தில் போராடியவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்காமல், இடையில் வந்த இடைத்தரகர்கள் மூலம் கடந்த ஆட்சியில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதனால், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்த ஏராளமான ஏழைப்பயனாளிகள் பாதிப்படைத்துள்ளனர். உண்மையான ஏழைப் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் வகையில், முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us