ADDED : ஆக 05, 2011 12:45 AM
திருப்பூர் : மினி ஆட்டோ கவிழ்ந்து, கட்டட தொழிலாளி
உயிரிழந்தார்.திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடி மரம், வ.உ.சி., நகர்
பகுதியை சேர்ந்த மருதுபாண்டி மகன் வைரம் (42); கட்டட தொழிலாளி.
இவரும்,
அப்பகுதியை சேர்ந்த நான்கு தொழிலாளர்களும், மினி ஆட்டோவில் (டி.என்., 58 கே
2844) பயணித்துள்ளனர். முருகம்பாளையம் வழி யாக, பல்லடம் ரோடு நோக்கிச்
சென்று கொண்டிருந்தனர்.இடுவம்பாளையம் தண்ணீர் தொட்டி அருகே மினி ஆட்டோ
வேகமாக சென்றபோது, நிலை தடுமாறி ரோட்டோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
ஆட்டோவுக்கு அடியில் சிக்கிய வைரம், பலத்த காயமடைந்து அதே இடத்தில்
உயிரிழந்தார். ஆட்டோவில் பயணித்த மற்ற நால்வரும் காயமின்றி உயிர் தப்பினர்.
தப்பியோடிய ஆட்டோ டிரைவர் குறித்து ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரிக்கின்றனர்.


