/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/வழக்கம்போல் லாரிகள் புதுகையில் இயக்கம்வழக்கம்போல் லாரிகள் புதுகையில் இயக்கம்
வழக்கம்போல் லாரிகள் புதுகையில் இயக்கம்
வழக்கம்போல் லாரிகள் புதுகையில் இயக்கம்
வழக்கம்போல் லாரிகள் புதுகையில் இயக்கம்
ADDED : ஆக 21, 2011 02:20 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் லாரிகள் ஸ்டிரைக் மூன்றாவது நாளாக நேற்றும் பிசுபிசுத்தது.
மணல், செங்கல், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் வழக்கம்போல் இயங்கின. டீஸல் விலையை குறைக்கவேண்டும், காலியாக செல்லும் லாரிகளுக்கு சுங்கச் சாவடிகளில் வசூல் செய்யப்படும் கட்டணத்தை குறைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக நேற்றும் ஸ்டிரைக் நீடித்தது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் 50 சதவீத லாரிகள் மட்டுமே ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளது. இதன்காரணமாக அம்மாவட்டத்தில் லாரிகள் ஸ்டிரைக்கால் நேற்றுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மணல், ஜல்லி, கம்பி, சிமின்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றிச்செ ல்லும் லாரிகள் மாவட்டம் முழுவதும் இயங்கி வருகிறது. இதுபோன்று வெளிமாவட்டங்களிலிருந்து காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றி வந்த லாரிகள் புதுக்கோட்டை நகரில் உள்ள முக்கிய கடைவீதிகள் மற்றும் காய்கறி மார்கெட்டுகளில் பாரம் இறக்குவதற்காக அணிவகுத்து நின்றதை காணமுடிந்தது. டேங்கர் லாரிகளும் வழக்கம்போல் இயங்கின. லாரிகள் மூலமான ரேஷன் பொருட்கள் வினியோகமும் தங்கு தடையின்றி நடந்தது. இதன்காரணமாக அம்மாவட்டத்தில் லாரிகள் ஸ்டிரைக் பிசுபிசுத்தது.


