/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பள்ளிவாசலில் ஓட்டுவேட்டை: 5 வேட்பாளர்கள் கூடியதால் பரபரப்புபள்ளிவாசலில் ஓட்டுவேட்டை: 5 வேட்பாளர்கள் கூடியதால் பரபரப்பு
பள்ளிவாசலில் ஓட்டுவேட்டை: 5 வேட்பாளர்கள் கூடியதால் பரபரப்பு
பள்ளிவாசலில் ஓட்டுவேட்டை: 5 வேட்பாளர்கள் கூடியதால் பரபரப்பு
பள்ளிவாசலில் ஓட்டுவேட்டை: 5 வேட்பாளர்கள் கூடியதால் பரபரப்பு
ADDED : அக் 07, 2011 11:05 PM
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் பள்ளி வாசலில் அனைத்து கட்சி
வேட்பாளர்களும் ஓட்டு கேட்க கூடியதால் பரபரப்பு நிலவியது.நெல்லிக்குப்பம்
நகர மன்ற தலைவர் பதவி 1996 - 2001ல் ஆதிதிராவிட பெண்களுக்கு
ஒதுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மறுசீரமைப்பில் 2006ல்
தலைவர் பதவி பொதுவானது.
அப்போது தி.மு.க., கூட்டணியில் இருந்த வி.சி., கட்சிக்கு தலைவர் பதவி
ஒதுக்கப்பட்டதால் பொதுவாக இருந்தும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஒரே
கவுன்சிலர் கெய்க்வாட்பாபு தலைவரானார்.இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு தலைவர்
பதவி பொதுவாக இருக்க வேண்டிய நிலையில் வரும் தேர்தலில் ஆதிதிராவிடர்களுக்கு
ஒதுக்கப்பட்டது. பொதுபிரிவை ஆதிதிராவிடர்களுக்கு மாற்றியதற்கு தடை
விதிக்கக் கோரி முஸ்லிம்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கு அரசு தரப்பில் வரும் 10ம் தேதி பதிலளிக்க உள்ளனர்.
நெல்லிக்குப்பத்தில் மொத்தமுள்ள 32 ஆயிரம் ஓட்டுகளில் 7,000 பேர்
முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களின் ஓட்டுக்களை மொத்தமாக பெற்றால் வெற்றி
பெறலாம் என அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் முஸ்லிம் பிரமுகர்களை சந்தித்து
ஆதரவு திரட்டி வருகின்றனர்.
வரும் 10ம் தேதி கோர்ட் தீர்ப்புக்குப் பிறகே முஸ்லிம்கள் யாரை
ஆதரிப்பார்கள் என தெரிய வரும்.இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம்
சின்னத்தெரு பள்ளிவாசலில் 1,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொழுகைக்கு
வந்தனர். அவ்வளவு பேரையும் ஒரே இடத்தில் சந்திக்க அ.தி.மு.க., சுதாகர்,
தே.மு.தி.க., கவிதா, தி.மு.க., புகழேந்தி, சுயேச்சை பழனிவேல், வி.சி.,
முல்லைவேந்தன், காங்., மீண்ட செல்வம் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் பள்ளி
வாசல் முன் கூடினர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் தி.மு.க., புகழேந்தி முன்னாள் எம்.எல்.ஏ.,
சபாராஜேந்திரன் தங்கள் ஆதரவாளர்களுடன் சுல்தான் பேட்டை பள்ளிவாசலுக்குச்
சென்றனர்.
மற்ற ஐந்து வேட்பாளர்களும் தொழுகை முடித்து விட்டு வந்த முஸ்லிம்களிடம்
ஓட்டு கேட்டனர். ஐந்து வேட்பாளர்கள் ஒரே இடத்தில் ஓட்டு கேட்டதால் பரபரப்பு
நிலவியது.


