/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/தனியார் கல்வி நிறுவனத்துக்கு சீல் வைப்பு மாணவர்கள் கலெக்டர் ஆஃபீஸில் முற்றுகைதனியார் கல்வி நிறுவனத்துக்கு சீல் வைப்பு மாணவர்கள் கலெக்டர் ஆஃபீஸில் முற்றுகை
தனியார் கல்வி நிறுவனத்துக்கு சீல் வைப்பு மாணவர்கள் கலெக்டர் ஆஃபீஸில் முற்றுகை
தனியார் கல்வி நிறுவனத்துக்கு சீல் வைப்பு மாணவர்கள் கலெக்டர் ஆஃபீஸில் முற்றுகை
தனியார் கல்வி நிறுவனத்துக்கு சீல் வைப்பு மாணவர்கள் கலெக்டர் ஆஃபீஸில் முற்றுகை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தனியார் கல்வி நிறுவனம் பூட்டி சீல் வைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கம் ஃபயர் அன்ட் சேப்டி மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம் மத்திய, மாநில அரசுகள் அனுமதியின்றியும், பல்கலைகளின் முறையான அங்கீகாரம் இன்றியும், மாணவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்குவதாகவும் எழுந்த புகாரைத் தொடர்ந்து உஷாரான போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் கல்வி நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், மோசடி நடந்துள்ளது ஊர்ஜிதமானதைத் தொடர்ந்து கல்வி நிறுவனத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனால் அக்கல்வி நிறுவனத்தில் படித்த 300க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சத்தியமங்கலம் ஃபயர் அன்ட் சேப்டி மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும். கல்வி நிறுவனம் வசூல் செய்துள்ள கட்டணத்தை திருப்பி பெற்றுத்தரவேண்டும். இதுபோன்று மோசடிகளில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலக வளாகம் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது.


