Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நடுத்தர மக்களுக்கே கஷ்டம் ஏழைகளுக்கு?

நடுத்தர மக்களுக்கே கஷ்டம் ஏழைகளுக்கு?

நடுத்தர மக்களுக்கே கஷ்டம் ஏழைகளுக்கு?

நடுத்தர மக்களுக்கே கஷ்டம் ஏழைகளுக்கு?

ADDED : ஆக 20, 2011 11:28 PM


Google News
கோவை:ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது; தங்கம் வாங்க நடுத்தர மக்களையே யோசிக்க வைத்திருக்கும் இந்த விலையேற்றம், ஏழைகளுக்கு இனி தங்கம் என்றால் எட்டாக்கனியாகவே போய்விடும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.கோவையில் ஒரு பவுன் தங்கம் கடந்த 18ம் தேதி, 20 ஆயிரத்து 32 ரூபாயாக இருந்தது; அடுத்து ஒரே நாளில் 896 ரூபாய் அதிகரித்து நேற்று முன்தினம் 20 ஆயிரத்து 928க்கு விற்பனையானது. அதிரடியாக நேற்று ஒரு பவுன் தங்கம் 21 ஆயிரத்து 32 ரூபாயாக எகிறியது. கடந்த இரு நாட்களில் 1,000 ரூபாய் அதிகரித்துள்ளது.

வீட்டில் சுபமுகூர்த்தம் உள்ளிட்ட விசேஷங்களுக்காக நகை வாங்க காத்திருந்த பொதுமக்களை இந்த அதிரடி விலையேற்றம் பேரிடியாக தாக்கியுள்ளது. ஆவணி மாதத்தில் அதிக விற்பனை நடக்கும் என்ற நம்பிக்கையில் தங்கத்தில் முதலீடு செய்து அதிகளவில் புதுப்புது டிசைன் நகைகளை ÷ஷாரூம்களில் வைத்திருந்த தங்க நகை விற்பனையாளர்களுக்கும், விற்பனை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய விலையேற்றத்தால் நடுத்தர மக்களே நகை வாங்க யோசிக்கும்போது, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு தங்கம் என்றால் எட்டாக்கனியாகிவிடும் நிலை ஏற்

பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us