ADDED : ஆக 23, 2011 05:42 PM
கோவை: சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது.
கூட்டத்தில் 2011-12 மற்றும் 2012-13 ம் வருடங்களுக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் தலைவராக நாகராஜன், துணைத்லைவைராக அன்பழகன், செயலாளர்களாக லோகநாதன், முரளி கண்ணன், நல்லதம்பி, பொருளாளராக மதிவாணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொழில் துறையில் உள்ள கடுமையான ஆள் பற்றாக்குறையை, நிவர்த்தி செய்யும் பொருட்டு நேர்முக பயிற்சி கூடம் துவங்கப்படும். அதற்காக பாடத்திட்ட வடிவங்களை தொழில் முனைவோர் ஒத்துழைப்புடன் வடிவமைத்து நடைமுறைப்படுத்தப்படும் என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


