நிழல் உலக தாதா தாவூத் கூட்டாளி லண்டனில் கைது: இந்தியாவுக்கு கொண்டு வர சி.பி.ஐ., முயற்சி
நிழல் உலக தாதா தாவூத் கூட்டாளி லண்டனில் கைது: இந்தியாவுக்கு கொண்டு வர சி.பி.ஐ., முயற்சி
நிழல் உலக தாதா தாவூத் கூட்டாளி லண்டனில் கைது: இந்தியாவுக்கு கொண்டு வர சி.பி.ஐ., முயற்சி

கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் , நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம்,61 முக்கிய குற்றவாளியாக போலீசாரால் தேடப்பட்டு வருகிறான். தற்போது சர்வதேச அளவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்படடு , இன்டர்போல் அமைப்பின் ரெட்கார்னர் நோட்டீஸ் பட்டியலில் உள்ளான். பாகிஸ்தானில் பதுங்கியிருக்கலாம் என இந்தியாவால் கூறப்பட்டு வந்தது. ஆனால் பாகிஸ்தான் பல முறை மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும் தற்போது தாவூத் இப்ராஹிம் துபாயில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் வலதுகரமாக செயல்பட்டவனும், அவனது முக்கிய கூட்டாளியாக கருதப்படுபவனுமான இக்பால் மிர்சி(61). என்பவர், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவன் அங்கு வழக்கு ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட இக்பால் மிர்சி சர்வதேச போதை மருந்து கடத்துபவர்களில் முதல் 50 இடங்களில் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.மிர்சி மீது கடந்த 1994ம் ஆண்டு இண்டர்போல் அமைப்பால் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்திய அதிகாரிகள் கூறுகையில், மிர்சி கைதை இண்டர்போல் அமைப்பு உறுதி செய்துள்ளது. தற்போது அவனிடம் விசாரணை நடந்து வருகிறது. மிர்சியை நாடு கடத்துவது குறித்து தூதரக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஏற்கனவே கடந்த 1995ம் ஆண்டு மிர்சி இங்கிலாந்தில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தபோது, அவனை இந்தியாவுக்கு கொண்டு வர அப்போது சி.பி.ஐ., எடுத்த முயற்சி பலன் தரவில்லை. தற்போது சி.பி.ஐ., அவனை இந்தியாவுக்கு கொண்டு வர மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளது.


