சிறப்பு படி வழங்கக்கோரி ஐகோர்ட் டிரைவர்கள் மனு : அரசுக்கு நோட்டீஸ்
சிறப்பு படி வழங்கக்கோரி ஐகோர்ட் டிரைவர்கள் மனு : அரசுக்கு நோட்டீஸ்
சிறப்பு படி வழங்கக்கோரி ஐகோர்ட் டிரைவர்கள் மனு : அரசுக்கு நோட்டீஸ்
மதுரை : மதுரை ஐகோர்ட் கிளையில் பணிபுரியும் டிரைவர்களுக்கு சிறப்பு படி வழங்க கோரிய மனு குறித்து பதிலளிக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது.
ஈரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உட்பட 16 பேர் தாக்கல் செய்த மனு: மதுரை ஐகோர்ட் கிளையில் வெளியூர்களை சேர்ந்த 25 பேர் டிரைவர்களாக பணிபுரிகிறோம். தற்போது மதுரை நகரில் குடியிருந்து உலகனேரியிலுள்ள ஐகோர்ட் கிளைக்கு சென்று வருகிறோம். பள்ளி, மருத்துவம் போன்ற பல காரணங்களுக்கு நகருக்குள் செல்ல வேண்டியுள்ளது. நீதிபதிகள் அழைக்கும் நேரங்களில் தவறாமல் செல்ல வேண்டியுள்ளது. நீதிபதிகளின் உதவியாளர்களுக்கு சிறப்பு படி வழங்கப்படுகிறது. அதுபோல எங்களுக்கும் சிறப்பு படி வழங்க கோரி ஏற்கனவே ஐகோர்ட் கிளை நிர்வாகம், அரசிடம் மனு கொடுக்கப்பட்டது. நடவடிக்கை இல்லை. சிறப்பு படி வழங்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச், இதுகுறித்து இரு வாரங்களுக்குள் பதிலளிக்க உள்துறை செயலாளர், சென்னை ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல், ஐகோர்ட் கிளை பதிவாளருக்கு(நிர்வாகம்) நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


