ஸ்ரீவி.,யில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஸ்ரீவி.,யில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஸ்ரீவி.,யில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூலை 27, 2011 10:30 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடித்தேரோட்டத்தையொட்டி கடந்த வாரம் ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நேற்று ராமகிருஷ்ணபுரம் ஜங்சன், சின்னக்கடை பஜார், ஆத்துக்கடை தெரு பகுதிகளில் ரோட்டோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளின் படிக்கட்டுகள், வாறுகால் மீது கட்டப்பட்ட கட்டுமானங்கள் அகற்றப்பட்டன. இதில் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.