இந்தியா- பாக்., உறவில் புதிய அத்யாயம்: நிருபமா ராவ்
இந்தியா- பாக்., உறவில் புதிய அத்யாயம்: நிருபமா ராவ்
இந்தியா- பாக்., உறவில் புதிய அத்யாயம்: நிருபமா ராவ்
புதுடில்லி : இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய அத்யாயம் ஏற்பட்டுள்ளது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் கூறியுள்ளார்.
டில்லியில் இந்தியா பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்திய மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
பின்னர் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரபமா ராவ், ஹூரியத் தலைவர்களை ரபானி சந்தித்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. இரு தரப்பு உறவுகளை முன்னெடுத்து செல்வதிலும், புதிய அத்தியாயம் ஏற்படுத்துவதிலும் அரசியல் ரீதியிலான நம்பிக்கை உள்ளது. இன்று நடந்த பேச்சுவார்த்தை புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிவினைவாதிகளை ரபானி சந்தித்தது பேச்சுவார்த்தையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என கூறினார்.