ADDED : ஆக 30, 2011 02:35 AM
வடமதுரை:வடமதுரை வட்டாரத்தில் ஐசோபாம், எண்ணெய்வித்து திட்டம், விதை கிராமத்திட்டம், தானிய அபிவிருத்தி திட்டம், விதை கொள்முதல் திட்டம், மக்காசோள அபிவிருத்தி திட்டம், ஆர்.ஏ.டி.பி.திட்டம் மூலம் மானியம் வழங்கப்படுகிறது.
இதற்கான துவக்க விழா வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது. பழனிச்சாமி எம்.எல்.ஏ., தலைமை வகித்து, இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் பாஸ்கரன், அ.தி.மு.க., செயலாளர் அழகர்சாமி, நகர செயலாளர் மணி பங்கேற்றனர்.


