/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தி.மு.க.,பிரமுகர் கொலை : மேலும் மூன்று பேர் கைதுதி.மு.க.,பிரமுகர் கொலை : மேலும் மூன்று பேர் கைது
தி.மு.க.,பிரமுகர் கொலை : மேலும் மூன்று பேர் கைது
தி.மு.க.,பிரமுகர் கொலை : மேலும் மூன்று பேர் கைது
தி.மு.க.,பிரமுகர் கொலை : மேலும் மூன்று பேர் கைது
ADDED : ஆக 25, 2011 11:41 PM
நரிக்குடி : பழிக்குப் பழியாக தி.மு.க., நகர செயலாளர் பன்னீர்செல்வத்தை கொலை செய்தவர்களில், மேலும் மூன்று பேரை நரிக்குடி போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் பேரளம் தி.மு.க., நகர செயலாளர் பன்னீர் செல்வம் ஆக.,19 ல் நரிக்குடி அருகே பூவாக்கனியில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக சிவகங்கை மாவட்டம் ஒய்யவந்தானை சேர்ந்த கலைவானன், நாகலிங்கம், ஸ்டாலின் பிரபாகரன் ஆகியோர் தேளி கிராம நிர்வாக அலுவலர் திருப்பதியிடம் சரணடைந்தனர். மேலும் பலரை நரிக்குடி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நரிக்குடி இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் பார்த்திபனூர் செக்போஸ்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று பேரை விசாரித்தனர். அவர்கள் பன்னீர் செல்வம் கொலை வழக்கில் தொடர்புடைய ஒய்யவந்தான் பொன்முத்தராஜா, 23, பாஸ்கரன், 29, ஆனந்த ஈஸ்வரன், 26, என தெரிய வந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


